13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் – தட்சிணாமூர்த்தி

100

காவிரி டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தஞ்சையில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்கென மேட்டூர் அணையும், கல்லணையும் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் ஒருபோக சம்பா சாகுபடியை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு இயந்திர நடவு பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்டா மாவட்டங்களில் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு, இயந்திர நடவு பணிகளுக்கு தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்று கூறினார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of