ஸ்டெர்லைட் ஆலை குறித்து தருண் அகர்வால் குழுவினர் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம்

579

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

நேற்று முன் தினம் தூத்துக்குடி வந்த மேகாலயா உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, உப்பாற்று ஓடை அருகே கொட்டப்பட்டுள்ள தாமிரதாது கழிவுகளை ஆய்வு செய்தது.

தொடர்ந்து நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன பொருட்கள், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலைங்கள், குளங்களில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் தூத்துக்குடி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த தருண் அகர்வால், அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் சென்னை கலசமஹாலில் உள்ள தென்னக பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலையிலான மூவர் குழுவினர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் மனுதாரர்களான வேதாந்தா குழுமத்தை சேர்ந்த அதிகாரிகள், எதிர்மனுதாரர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of