உரிமம் உள்ளவர்க்கு மட்டுமே மதுபானம் ?

157
onlyforpermit12.3.19

கே.கே.ரமேஷ், மதுரையைச் சேர்ந்த இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தற்போது தமிழகத்தில் தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்கப்படுகின்றன. வெளிநாட்டு ரக மதுபானங்களும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்றன.

போதைக்காக மதுபானத்தில் அதிக ரசாயனம் கலக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு தரம் குறைந்த மதுபானங்களை விற்று, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மதுவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையயில் இதை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் உள்ளதை போல் உரிமம் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க வேண்டும். இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டால் அனைவருக்கும் மது கிடைப்பது தடுக்கப்படும்.

எனவே தமிழகத்தில் மதுபானங்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உரிமம் வழங்குவதை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகளின் உள்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.