பறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் ?

520

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர், இந்நிலையலில் நேற்று இரவு குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.53 லட்சம் இருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை வாங்கி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு கொண்டு செல்வதாகவும், தாங்கள் தனியார் ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.53 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of