ஒரு கையில் கபசுரக் குடிநீர், மறு கையில் மதுபானம் ஏன்? நீதிபதிகள் கேள்வி

724

தமிழக அரசு டாஸ்மாக் விவகாரத்தில் ஒருகையில் கபசுரக்குடிநீர், ஒருகையில் மதுபானம் என முரண்பாடான நிலையை கடைப்பிடிப்பது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் உச்சநிலையை அடைந்துள்ள தற்போதைய சூழலில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, கொரோனா முடியும் வரை மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி மதுரையை சேர்ந்த ஒருவர், சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள்,  நோய் எதிர்ப்புக்கு கபசுரக் குடிநீர் தரும் தமிழக அரசு மறுபுறம் மக்களுக்கு மதுபானத்தையும் வழங்கலாமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கிற்கான தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மே14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement