மதுக்கடைகள் எப்போது மூடப்படும்?

315

தமிழகத்தில் எப்போது மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 2016-க்கு பின்னர் திறக்கப்பட்ட மற்றும் மூடப்பட்ட மதுபான கடைகள் பட்டியலை மாவட்ட வாரியாக தர ஆணையிட்டுள்ளது.

மேலும், எத்தனை மதுபான கடைகள் மூடப்பட்டன என்பது குறித்தும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

2016 முதல் தமிழகத்தில் மதுபான கடைகளால் கிடைக்கப்பெற்ற வருவாய் எவ்வளவு என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.