டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

1270

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் தரத்திற்கு ஏற்றவாறு 1 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரையில் நாள் தோறும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், நாள் ஒன்றுக்கு 70 கோடி ரூபாய் வரையிலும் விற்பனை நடைபெறுகிறது.

விற்பனை மற்றும் முறைகேடுகள், கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் தற்போது 5 மண்டலங்களிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வரும் டிசம்பர் இறுதிக்குள் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக வங்கிகளிடம் இருந்து விலைப்பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுள்ளது.

இந்த திட்டம் சென்னையில் அடுத்த மாதமும், அதைத் தொடர்நது மற்ற மாவட்டங்களி்லும் டிசம்பர் இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் பில்லிங் நடைமுறையில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் கொள்ளைகளை தடுக்கும் விதமாகவும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதையும் தடுக்கும் விதமாகவும் இதை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement