“டாஸ்மாக் ஊழியர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்”

162

கோவை மாவட்டம், சரவணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, கடந்த ஞாயிற்று கிழமை மது அருந்த சென்ற சிலருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை, கடை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்மநபர்கள், தங்களது கூட்டாளிகளுடன் சென்று, பாரில் இருந்த டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த ஊழியர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவானதை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய உருமாண்டம்பாளையம் சாஸ்திரி வீதியை சேர்ந்த மதிவாணன், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த ரகுபதி, கண்ணன் மற்றும் உழைப்பாளர் வீதியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of