40,000 பேருக்கு வேலை உறுதி செய்து நெகிழவைத்த டிசிஎஸ்!

874

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமெங்கும் உள்ள தொழில் நிறுவனங்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ஊதியக் குறைப்பு, பணிநீக்கம் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அம்பானி தொடங்கி சிறிய வணிகம் புரியும் தொழில்முனைவர் வரை அனைவரும் வருவாய் இன்றி பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். குறிப்பாக சில்லறை வர்த்தகக் கடைகள் திறக்கப்படாததால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உட்பட அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் டிசிஎஸ் நிறுவனம் ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் எனும் மாபெரும் ஐடி நிறுவனம் அண்மையில் நடத்திய நேர்காணலில் தேர்வான இளைஞர்களுக்கு வேலை உறுதி என்ற செய்தியை அறிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் இந்தப் பணிகளுக்குத் தேர்வான இளைஞர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் அவர்களை வேலைக்கு நிச்சயம் எடுத்துக் கொள்வோம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of