டீ போட முடியாதா…? என்ன பண்றேன் பாரு..! இளைஞர்களின் துணிகரச்செயல்..!

714

மதுரை கிருஷ்ணாபுரம் காலணியில் மாரிமுத்து என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இளைஞர்கள் சிலர் மாரிமுத்துவிடம் கடனுக்கு டீ கொடுக்க சொல்லி வற்புறுத்தியதாக தெரிகிறது.

ஆனால், அதற்கு மாரிமுத்து மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், டீக்கடையில் புகுந்து மாரிமுத்துவை கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்த மரிமுத்துவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ஒருவனை கைது செய்துள்ள போலீசார், மற்ற இளைஞர்களை தேடி வருகின்றனர்.