சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! ஆசிரியை போக்சோவில் கைது!

995

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த நிர்மலா என்ற ஆசிரியை அருகில் வசிக்கும் பள்ளி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் சென்ற நிர்மலா, ஒத்தக்கடையில் உள்ள தனி அறையில் வைத்து 4 நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of