மனித உடலில் எத்தனை எலும்புகள்? – கேள்விக்கு தவறாக பதில் சொல்லிய ஆசிரியர் கைது

784

உத்தரப்பிரதேசத்தில், மனித உடலில் எத்தனை எலும்புகள் என்ற கேள்விக்கு தவறாக பதில் சொல்லி மாட்டிக்கொண்ட ஆசிரியர் ஒருவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2015-ம் ஆண்டு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் ஆஷிஷ் குமார் என்பவர் முதல் இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்று, உதேம்பூர் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே போலி சான்றிதழ் அளித்து சிலர் பணியில் சேர்ந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை செய்ததில் ஆஷிஷ் குமார் கல்லூரிக்கே சென்றதில்லை என்பது தெரிவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன என்ற கேள்வியை கேட்டுள்ளானர். இதற்கு அவர் 256 என்று பதிலளித்துள்ளார். 4வது வகுப்பு கணிதத்தை போட தெரியாமல் இருந்ததையும் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில், தேர்வில் முறைகேடு செய்தும், போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி பணியில் சேர்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement