மாணவனுக்கு முறிந்த எலும்பு..! ஆசிரியர் மீது புகார்..!

495

பொன்னமாபேட்டையை சேர்ந்த நந்தகுமாரின் மகன் சஞ்சய், அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறான்.

அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் குமார் என்பவர், சிறுவன் சஞ்சயை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவனின் மணிக்கட்டு பகுதியில் வீங்கியதையடுத்து, அவரது பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர்.

அப்போது சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை தாக்கிய ஆசிரியர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of