96% ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் – பள்ளிக் கல்வித்துறை

518

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் (இன்று) காலை 9 மணிக்குள் பணிக்கு வரவில்லை என்றால், அந்த இடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 95% மேனிலைப் பள்ளி ஆசிரியர்களும் 70% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்

மேலும் 95% மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 70% தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement