வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவ

490

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Advertisement