ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை தள்ளி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

310

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவது தொடர்பான இடமாறுதல் கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இது தொடர்பாக கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் 2017 ஜூன் 1 ம் தேதிக்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களும் 2019 ஜூன் 1 ம் தேதி வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி இருக்கும் ஆசிரியர்களும் மட்டுமே இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அருகில் உள்ள பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தும் அரசின் நிபந்தனைக்களால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று முதல் நடைபெறவிருந்த கலந்தாய்வை தள்ளி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பணிஇட மாறுதல் தொடர்பான பள்ளிக்கல்வி துறையின் அரசாணைக்கும் இடைக்கால தடை விதித்து  நீதிபதி உத்தரவிட்டார்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of