ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்- புதுச்சேரி முதலவர்

301

ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் தான் ஆசிரியர்களின் பணி முழுமையாக நிறைவடையும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அரசு பள்ளிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் தான், ஆசிரியர்களின் பணி முழுமையாக நிறைவடையும் என்றார்.

Advertisement