தொடர்ந்து 2வது நாளாக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

544

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் அரசு அலுவலங்களிலும் பணிகள் முடங்கியது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்றும் நாளையும் ஜாக்டோ ஜியோ சார்பில் வட்டங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இதனிடையே தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டே ஜியோ கூட்டமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of