“பள்ளிக்கு வந்தா செல்பி எடுக்கனும்!” மாநில அரசின் வித்தியாசமான திட்டம்!

539

உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆவார். இவர் அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக உடல் தகுதிப் பெறாத 50 வயது நிரம்பிய சில காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார்.

இந்நிலையில் பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கையில் எடுக்கும் வகையில் ஒரு வித்தியாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அந்த திட்டத்தின் படி, ஆசிரியர் பள்ளிக்கு வருகை தந்தவுடன் வகுப்பறையின் முன் நின்று செல்பி எடுத்து, அதனை பேசிக் சிஷா இணையத்தளப் பக்கத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு செல்பி எடுக்க தவறினால், ஆசிரியரின் ஒரு நாள் சம்பளம் பிடிக்கப்படும். தாமதமாக பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தராமல் சம்பளம் வாங்குவது போன்ற முறைகேடுகளை தடுக்க இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் சில நேரங்களில் கோளாறுகள் ஏற்படும் போது, சரியான நேரத்திற்குள் செல்பியை பதிவு செய்யாமல் இருக்க நேரிடும் போன்ற பிரச்சனைகள் இந்த திட்டத்தில் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement