பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்-பள்ளிக்கல்வித்துறை

431

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 400-க்கு மேற்பட்ட ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்றும், அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of