பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

518

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இரண்டாம் நாளாக நீடிக்கும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை டி.பி.ஐ அலுவலக வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் இசை, உடற்பயிற்சி, தோட்டக்கலை, தையல் உள்ளிட்ட பாடங்கள் எடுக்கும் இவர்களுக்கு மாத ஊதியமாக 7 ஆயிரத்து 700 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

பணி நிரந்தரமும் இல்லாமல், போதிய ஊதியமும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்கள், தற்போதைய பொருளாதார சூழலில் குடும்பத்தை நடத்த வழியில்லாமல் தவிப்பதாக தெரிவித்தனர்.

தமிழக அரசு மற்ற துறைகளுக்கு வழங்கும் சலுகைகளை தங்களுக்கு தர மறுக்கிறது என்றும், பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வரும் வரை இங்கிருந்து நகரப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலர் மயக்கமடைந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.