தெலுங்கானா சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படாது – முதல்வர் சந்திரசேகரராவ்

506

தெலுங்கானாவில் ஆட்சி அமைத்த தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி 4 ஆண்டை நிறைவு செய்கிறது. இதனையொட்டி நடந்த பேரணியில், சட்டசபை கலைப்பு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பேரணிக்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சந்திரசேகரராவ், தெலுங்கானாவின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பினை டி.ஆர்.எஸ்., கட்சி தொண்டர்கள் எனக்கு கொடுத்துள்ளனர் என்றும். ஆட்சி கலைப்பு தொடர்பான முடிவினை எடுக்கும் போது அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், பகிரதா திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கவில்லை எனில், அடுத்த தேர்தலை நான் சந்திக்க போவதில்லை என சந்திரசேகரராவ் தெரிவித்தார். தமிழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில கட்சிகளே ஆட்சி நடத்துகின்றன என்றும்.

அதே போல்தான் தெலுங்கானாவிலும் நடைபெறுகிறது என்றும் கூறினார். மேலும், ஒருபோதும் டெல்லி தலைமைக்கு தெலுங்கானா அடிபணியாது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of