தெலங்கானா அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் 57 ஆக அதிகரிப்பு

794

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜெகதாலா மாநிலம் குண்டகட்டா மலைபாதையில், இன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி மேலும்17 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement