“தருவியா.. தரமாட்டியா..” மகள்களை ஏரியில் வீசிய தந்தை..! அதிர்ச்சி காரணம்..!

455

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டியில் உள்ள தாட்கோலி பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளன.

சிறு சிறு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர், சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு, சூதாடுவதற்கு பணம் தேவை என்று தனது மனைவியிடம் பயாஸ் கேட்டுள்ளார். இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், கோபமடைந்த அவர், தனது 3 மகள்களை அங்குள்ள ஏரியில் வீசி கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of