டிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..!

643

தெலங்கானாவில் டிக் டாக் மோகத்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்குப் பி‌றகு மீட்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது நண்பர்கள் கங்காஜலம், மனோஜ் ஆகியோருடன் அருகிலுள்ள கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனர்.

அங்கு மீன் பிடித்தபடி குளித்துக்கொண்டிருந்த அவர்கள் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதை கரையோரத்தில் இருந்து கவனித்த கிராமத்தினர், கங்காஜலம், மனோஜ் ஆகியோரை மீட்டனர். தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று அவர் உடல் மீட்கப்பட்டது.

டிக் டாக் மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of