தெலங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

534

ஆந்திராவில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக, சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். தெலங்கானா சட்டசபையின் பதவி காலம் நிறைவடைய இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். ஆனால் அதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் தெலங்கானா அமைச்சரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் சட்டசபையை கலைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement