பிக்-பாஸ் சீசன் 3 நிறுத்தம்? வெளியான பகீர் தகவல்!

3358

பிக்-பாஸ் என்ற நிகழ்ச்சி அயல்நாடுகளில் முதலில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி கொஞ்சம், கொஞ்சமாக ஹிட் அடித்து பல நாடுகளில் ரியாலிட்டி ஷோவாக வலம் வந்தது.

தற்போது தென்னிந்தியாவில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழில் வெளியான முதல் சீசனுக்கும், இரண்டாம் சீசனுக்கு ஆதரவு அதிகமாக இருந்த நிலையில் தற்போது 3-வது சீசனுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

3-வது சீசன் ஜுன் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய முதல் சீசன் போல நானி தொகுத்து வழங்கிய சீசன் 2 இல்லை.

மறுபக்கம் சீசன் 3 க்கு போட்டியாளர்களாக அழைக்கப்பட்ட பிரபலங்கள் யாரும் சரியாக மறுபதில் கூறவில்லையாம். இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிறுத்தம் என தகவல் பரவியுள்ளது. ஆனால் நிகழ்ச்சி குழு தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது இன்னும் நடைபெற்று வருகிறது.

ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும் என கூறியுள்ளது. நாகார்ஜூனா, வெங்கடேஷ் அல்லது அனுஷ்கா தான் தொகுப்பாளர் என பெயர் அடிபட்டு வந்த நிலையில் நாகார்ஜூனா தான் என மெஜாரிட்டியாக தகவல் சுற்றி வருகிறது.