நள்ளிரவு 12 மணி…! zomato-வை வைத்து மாஸ்டர் பிளான்..! இளைஞருக்கு குவியும் பாராட்டு..!

1213

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஒபேஷ். இவர் ஷாப்பிங் காம்பிளக்ஸ்-க்கு இரவு நேரத்தில் சென்றுள்ளார். காம்பி;ளக்ஸில் அவரது வேலையை முடித்து விட்டு வெளியே வரும் போது இரவு 12 மணி ஆகியுள்ளது.

வீட்டிற்கு செல்ல எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லாததால் என்ன செய்வதென்று திகைத்துள்ளார் ஒபேஷ். அப்போது அவர் மண்டைக்குள் பல்பு எரிந்துள்ளது.

உடனே அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவரது போனை எடுத்து ஜொமோட்டோவில், அவரது வீட்டு விலாசத்திற்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அந்த ஹோட்டலுக்கு உணவு வாங்க வந்த ஜொமோட்டோ ஊழியரிடம், நீங்கள் உணவோடு சேர்த்து வீட்டில் சேர்த்து விடுகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, உணவோடு சேர்ந்து அவரும் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக ஒபேஷ் தனது போஸ்புக் பக்கத்தில், பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வித்தியாச ஐடியாவிற்காக, பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of