மனிதர்களை போன்று அடர்ந்த தலைமுடிடன் செங்கமலம் யானை..!

515

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமான செங்கமலம் எனப் பெயரிடப்பட்ட யானை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு  முகாமில் பங்கேற்றுள்ளது.வித்தியாசமான முறையில் மனிதர்களை போன்று அடர்ந்த தலைமுடிடன் காணப்படுவதால் செங்கமலம் யானை பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஆதிகாலத்தில் வாழ்ந்த மமூத் வகை யானைகள் மட்டுமே உடலில் ரோமங்களுடன் காணப்பட்டது.

அதே போன்று செங்கமலமும் தலையில் சிகையுடன் காணப்படுவதால் மமூத் வகை யானையின் பரிணாம வளர்ச்சியில் செங்கமலம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.