வனிதாவுக்கு பிறகு List-ல் சேர்ந்த மீரா! சம்மன் அனுப்பிய போலீஸ்! எதுக்கு தெரியுமா..?

1226

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டு, அதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

அவர்களில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுனும் அடங்குவார். இவர் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சென்னை தி.நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணிடம் ரூ.50,000 பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மீரா மிதுனைக் கைது செய்ய தேனாம்பேட்டை போலீசார் பிக் பாஸ் வீட்டிற்கு விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement