சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள பயமா? – முதல்வர் பழனிசாமி பதில்

810

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள பயமா? என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்கான டெண்டர் விடப்பட்டதில் முதலமைச்சர் பழனிசாமி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐ நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால் வழக்கை சந்திக்க பயப்படுகிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, உயர்ந்த பதவியில் இருப்பதனால் நியாயமாக, நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும், அதனால் சிபிஐ-யிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் எந்தவித குற்றமும் சொல்லவில்லையே என கேள்வி எழுப்பினார்.

இதன் காரணமாகவே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்

Advertisement