டெண்டர் முறைகேடு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

297

டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக தமிழக அரசு செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்க மறுத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, திடீரென மாற்றப்பட்டு உள்ளார் என புகார் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட திட்டத்தின் டெண்டர் ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் பற்றி கோப்புகளை கைப்பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை மாற்றி, முதல்வர் பழனிசாமி பழிவாங்குவதைக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாரத் நெட், தமிழ் நெட் திட்டம் அதிமுக அரசின் கீழ் உருப்படியாக நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும் இத்திட்டத்தை அதிமுக அரசு ஊழல் மயமாக்கிவிடும் என்பதற்கு ஆதாரம் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் நடப்பதற்கு முன்பே தடுப்பது, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மற்றும் விழிப்புணர்வு ஆணையத்தின் கடமை என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of