கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

3023

ஹாலிவுட் சினிமாவில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டபோது, பலரும் கதையே இல்லாத ஆக்ஷன் திரைப்படங்களையும், சூப்பர் ஹீரோ கதைகளையும் மட்டுமே எடுத்து வந்தனர். அந்த டிரெண்டை உடைத்தவர் தான் கிறிஸ்டோபர் நோலன்.

ஹாலிவுட் சினிமாவின் மிகமுக்கிய இயக்குநர்களில் ஒருவரான இவர், இன்சப்ஷன், டன்க்ரிக், ஃபாலோவிங், இன்டர்செல்லார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அடுத்ததாக இயக்கி முடித்துள்ள திரைப்படம் Tenet. இந்த திரைப்படம் உருவாகி நீண்ட நாட்களாகியும், லாக்டவுன் காரணமாக இந்தியாவில் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில், ரசிகர்களின் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

அதாவது, டெனன்ட் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள், Tenet என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாக கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் தமிழில் வெளியாகாது.

பேட் மேன் சீரிஸ், இன்சப்ஷன் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிறிஸ்டோபர் நோலனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருவதால், Tenet திரைப்படம், தமிழ், உள்ளிட்ட 4 இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisement