மசூதியில் துப்பாக்கிச்சூடு! 40 பேர் உயிரிழப்பு?

474

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயுதப்படை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான்.

இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியதை அந்த நபர்கள் பேஸ்புக் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of