பயங்கரவாத குழு தன்னை கொலை செய்ய திட்டம் – ராஜபக்ச சகோதரர் பரபரப்பு

177

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பயங்கரவாத குழு தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக, அதிபர் சிறிசேனவிடம் முறையிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, தனது சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில், கோத்தபய ராஜபக்ச, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பயங்கரவாத குழு தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதிபர் சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

எனவே இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, பயங்கரவாத புலனாய்வு போலீஸ் இயக்குநருக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of