பயங்கரவாத அச்சுறுத்தல் : பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸ்

198

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாளை  நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்காக உரையாற்ற இருக்கிறார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். இந்நிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.கோவில்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of