காஷ்மீரில் போலீசாரின் உறவினர்களை பயங்கரவாதிகள் கடத்தியதால் பதற்றம்

430

காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான், குல்காம், அனந்த்நாக் மற்றும் பந்திபோரா பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும், காவலர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதி சையத் சலாவுதீனின் மகனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், போலீசாரின் உறவினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகள், தற்போது போலீசாரின் உறவினர்களை கடத்தியுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.