கார் குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்..?

183

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த,  தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதன் எதிரொலியாக இந்த தாக்குதலுக்கு, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, உளவு அமைப்புகளின் தகவல்களை மேற்கோள் காட்டி, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க, நாட்டின் முக்கிய நுழைவு வாயில்கள், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of