டெஸ்ட் கிரிக்கெட் – தர வரிசை பட்டியல் வெளியீடு

271

ஆஸ்திரேலிய வீரர்  கம்மின்ஸ் முதலிடம் வகிக்க 2 வது  இடம் – தென் ஆப்பிரிக்க வீரர் ரபடாவும் 3 வது இடம் – மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஜாசன் ஹோல்டரும் கைப்பற்றினர். 4 வது இடத்தை இந்திய வீரர் பும்ரா பிடிக்க  5 மற்றும் 6 – வது இடங்களை முறையே இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட்டும் பிடித்தனர்.

முதல் 6 இடங்களில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் 7 வது இடம் இந்திய வீரர் முகமது ஷமிக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் மற்றொரு வீரர் அஸ்வின் 10 வது இடம் பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள்  வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடம் வகிக்க, 2 வது இடத்தை வீராட் கோலி பிடித்துள்ளார். நியூசிலாந்தின் வில்லியம்சன் 3 – வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் புஜாரா 4 வது இடம்  பிடிக்க மற்றொரு இந்திய வீரர் ரஹானே 5- வது இடம் வகிக்கிறார்.

6- வது இடத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் 7 – வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோரூட் 8 வது இடத்தில் நியூசிலாந்தின் டாம் லாதம், 9 வது இடத்தில் இலங்கையின் கருணாரத்னே உள்ளனர்.

இந்திய வீரர் ரோகித் சர்மா 10 வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 243 ரன்கள் குவித்து சாதனை படைத்த தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 11 – வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of