வேலம்மாள் கல்வி குழுமத்தில் சோதனை – 532 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்

109

வேலம்மாள் கல்வி குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் காட்டப்படாத 532 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் செயல்பட்டு வரும் வேலம்மாள் குழுமத்தின், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் செவ்வாய் கிழமை முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை வருமானவரித் துறையைச் சேர்ந்த 2 குழுக்கள் மற்றும் மதுரை வருமான வரித்துறையைச் சேர்ந்த  ஒரு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேலம்மாள் கல்வி குழுமத்தில் 532 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டாத சொத்துகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேலம்மாள் கல்வி குழுமத்தில் 532 கோடிக்கு கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத 2 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக சோதனை நிறைவடைந்தாலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of