வெளிச்சத்தை எட்டும் இருட்டு குகை

744

எத்தனையோ சண்டை , சச்சரவுகள், வெற்றிகள், தோல்விகள், இயற்கை சீற்றம், பேச்சுவார்ததை என உலகில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றாலும், கடந்த ஒரு வாரமாக, சர்வதேசங்களையும் கட்டி வைத்து, எதிர்பார்ப்புடன் காக்க வைத்த நிகழ்வு என்றால், அது தாய்லாந்தின் குகையில் சிக்கிய சிறுவர்களும், அவர்களை உயிருடன் மீட்டதும்தான்… இதோ, அதன் அடுத்த கட்டம், பெரும் வெளிச்சத்தைப் பெற போகிறது… எப்படி என்பதை, இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…

இருட்டு குகை, மேடு பள்ளங்களுடன் குட்டைப் போல் வெள்ளநீர்,18 நாட்கள், 13 பேர், இருட்டு குகை என உலகையே தம்பக்கம் ஈர்த்த தாய்லாந்தின் தாம் லூவாங் குகை, தற்போது அடுத்த ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. ஆம், நேயர்களே…. 400 கோடி ரூபாய் செலவில் தாய்லாந்து குகையும் கால்பந்து குழுவும் என்ற கதையின் அடிப்படையில், இந்த பதினெட்டு தின நிகழ்வுகள், ஹாலிவுட் திரைப்படமாகிறது.

PURE PLIX ENTERTAINMENT என்ற நிறுவனம் அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இந்த படத்திற்கு, GOD’S NOT DEAD என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகையே மெய்சிலிரிக்க வைத்த இந்த மீட்புப்பணியை படமாக எடுத்தே தீர வேண்டும் என்பதில் அந் நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே, உயிர்போய் உயிர் வந்த அந்த 13 பேரும், உடல்நலம் தேறி வரும் காட்சிகள் முதல்முறையாக வெளியுலகிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை சிகிச்சை அறை கண்ணாடி வழியே, குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் கண்ணீர் மல்க அவர்களைப் பார்த்து கையசைப்பதும், அதற்கு அந்த குழந்தைகள் இரட்டை விரல்களை உயர்த்தி காண்பித்து, நலமாக இருக்கிறோம் எனக் கூறுவதும் என உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளன.

தற்போது அந்த 13 பேரும் உடல்நலத்துடன் இருந்தாலும், அனைவரும் சராசரியாக 3 கிலோ வரை எடை குறைந்துள்ளதால், அவர்கள் அனைவரும் மீண்டும் முழுத்தெம்புடன் வெளியே வருவதற்கு 10 தினங்கள் ஆகும் என மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மனதளவிலும், உடல் அளவிலும் தளந்ர்ந்து ப் போயுள்ள, இந்த 13 பேருக்காக உலகமே ஒன்றிணைந்து செயல்பட்டு, அனைவரையும் மீட்டெடுத்துச் சாதனைப் புரிந்துள்ளது என்பது மட்டும், மனித நேயம் இன்னமும் இந்த உலகில் சாகவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

Advertisement