“பிங்க்” ரீமேக் படத்துக்கு அஜித்தின் கால்ஷீட் இவ்ளோ நாள் தானா?

1003

எச். வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தன்வசமாக்கிய பிங்க் படத்தின் ரீமேக் தான் இது.இந்த படத்தை மறைந்த முன்னனி நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கின்றார். சில நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் பணிகள் தொடங்கின.

இப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடிக்கயுள்ளார். இதுவரை மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தனர்.

நாளை முதல் 2 வது கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது, இப்படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். வருகின்ற மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து அஜிதின் பிறந்த நாள் அன்று வெளியா வாய்ப்பு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement