“100 அடி..” வலிமை படத்திற்காக தல அஜித் எடுத்த பெரும் ரிஸ்க்..!

1289

தல அஜித் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வையை இயக்கிய ஹெச்.வினோத் தான் வலிமை படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக, அஜித் பெரும் ரிஸ்க்கான காட்சியில் நடித்து இருக்கிறாராம்.

அஜித் 100 அடியில் குதிப்பது போல் ஒரு காட்சியை எடுத்துள்ளார்களாம். அஜித்தும் டூப் போடாமல் அந்த காட்சியில் நடித்து பிரம்மிக்க வைத்தாராம். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிய, சென்னையில் செட் அமைத்து விரைவில் எடுக்கவிருக்கிறார்கள்.