துப்பாக்கி சுடுதல் போட்டி..! மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..! கொண்டாட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்..!

422

தமிழின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கியமான ஒருவர் தல அஜித்குமார். இவர், திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு தரப்பினருக்கு உதவிகளை செய்து வருகிறார்.

மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர், நடிப்பது மட்டுமின்றி, பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, சமையல் செய்தல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு நிலையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், தல அஜித் எடுத்த புள்ளிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

3 பிரிவுகளில் கலந்துக்கொண்ட தல அஜித், 2 பிரிவுகளில் முதல் இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.

ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.