“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..!

258

தமிழ் சினிமாவின், மிகமுக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். பொதுநிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துக்கொள்ளாத அஜித், தனது படத்திற்கான புரோமோஷன்களில் கூட கலந்துக்கொள்வதில்லை.

சில முக்கியமான தருணங்களில், அறிக்கை மட்டும் வெளியிடுவார். அந்த வகையில், அஜித் சார்பில், அவரது வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முறையான அனுமதியின்றி சில தனி நபர்கள், அஜித்தின் பிரதிநிதி என்று கூறுகிறார்கள் என்றும், அவர்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்படி யாராவது உங்களை அனுகினால், அவர்களை பற்றி அஜித்தின் அதிகாரப்பூர்வ மேலாளர் சுரேஷிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் மீறி, பாதகம் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு அஜித் பொறுப்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of