‘எந்திரன், பாகுபலி2’ படங்களை பின்னுக்கு தள்ளிய ‘விஸ்வாசம்’

2778

எந்திரன், ‘பாகுபலி 2’ படங்களுக்குப் பிறகு தற்போது ‘விஸ்வாசம் படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

கடந்த மாதம் அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், இமான் இசையில் பிரமாண்டமாக உருவாகி தமிழ் திரையுலகையே மிரளவைத்த  விஸ்வாசம் வசூல் சாதனை என எண்ணற்ற பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.இந்நிலையில், விஸ்வாசம் மேலும் ஒரு புதிய சாதனையை தமிழகத்தில் செய்துள்ளது. அது வேறு ஒன்றுமில்லை. ‘விஸ்வாசம் வெளிவந்து 4 வாரங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் தமிழகம் முழுவதும் 275 திரையரங்குகளில் ‘ஹவுஸ் புல்’என்பது தமிழகத்தில் தலையின் ரசிகர்கள் பலத்தை காட்டுகின்றது.

இதற்கு முன்பு ‘எந்திரன்’ படமும் ‘பாகுபலி 2’ படமும் தான் நான்கு வாரங்கள் தாண்டி ஓடின. தற்போது இப்படங்களை பின்னுக்கு தள்ளி‘விஸ்வாசம்’ படமும் நான்கு வாரங்களை தாண்டி தற்போது ஓடி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement