குட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..! வைரல் வீடியோ..!

1726

உலகத்தின் சிறப்பான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல்வேறு கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார்.

எத்தனையே கேப்டன்கள், இந்திய அணிக்கு வந்திருந்தாளும் இவர் தனி ஸ்பெஷல் தான் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இவரது பிறந்தநாளையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா பாடிய இந்த பாடல், விஜயின் குட்டி ஸ்டோரி பாடலின் மெட்டில் அமைந்துள்ளது. அதாவது, விஜய் பாடிய வரிகளுக்கு மாற்றாக தல தோனியை பற்றிய வரிகள் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement