த(ல)லைவர் பொங்கல் கொண்டாட்டம் –    

805
pongal festival

வருடா வருடம் பொங்கல் விடுமுறையை திருவிழா கோலமாக்க திரைப்படங்கள் ஒரு காரணமாக அமையும். தொடர்ந்து விடப்படும் நான்கு நாள் விடுமுறை நிச்சயமாக தியேட்டர் பக்கம் இழுத்து செல்லும். இந்த முறை இப்போதும் தொடர்கிறது. அந்த வரிசையில் இந்தாண்டு வெளிவருகின்ற திரைப்படங்களின் நிலை இதோ…

பேட்ட

ஆண்டின் தொடக்கத்திலே பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் பொங்கல் விடுமுறை நாளில் வெளிவருகிறது. 2018 ம் ஆண்டிலிருந்து ரசிகர்களின் ஆர்வத்தை உருவாக்கி வரும் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் ’பேட்ட’ திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி வெளிவரவுள்ளது. இதில் விடுதி காப்பாளராக ரஜினி நடிக்கவுள்ளார்.

ரஜினி என்றாலே ஒரு மாஸ். கருப்பு வெள்ளை காலம் முதல் 3D தொழில்நுட்ப காலம் வரை அவருக்கென ஒரு ரஜினி பட்டாளத்தை உருவாக்கி சிம்ம சொப்பனமாய் பல ஆண்டுகளாக வலம் வருகிறார். ரஜினி திரைப்படம் என்றாலே ஆராவாரமாக வரவேற்கிறது கோலிவுட் வட்டாரம்.

பல இடங்களில் ‘நான் ரஜினி ரசிகன்’ என பதிவு செய்யும் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தொடர்ந்து பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற மாறுபட்ட தளங்களில் படங்களை இயக்கியுள்ளார்.

மற்றும் இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். விஜய் செதுபதிக்கென ஒரு ரசிகர் படை உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. பேட்ட திரைப்படத்தில் சசிக்குமார், பாபி சிம்ஹா ,சிம்ரன், திரிஷா மற்றும் பாலிவுட் பிரபலம் நவாசுதின் சித்திக் போன்றோர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. அன்மையில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.  இதில் ரஜினி பேசும் வசனங்கள் வெளிவரும் மற்ற படங்களுக்கு சவால் விடும் அளவு உள்ளது. ‘எவனாவது பொண்டாட்டி புள்ள னு  செண்டிமெண்ட்னு இருந்தா அப்டியே ஒடிடு, கொல காண்டுல இருக்கன், மவன கொல்லாம விடமாட்டன்’

விஸ்வாசம்

பல நாட்களாக அஜித் ரசிகர்கள் திரையில் அஜித் படத்தை காண ஆவலாக இருந்த போது, அஜித் சிவா கூட்டனியில் நான்காவது முறையாக வெளியாகவுள்ள விஸ்வாசம் திரைபடத்தின் ட்ரைலர் அன்மையில் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்தளித்தது.

காட்சிக்கு காட்சி அஜித்தின் மாஸ் ஐ காட்டி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த ட்ரைலெர் யூ ட்யூப் ல் அதிக பார்வையளர்களை பெற்று வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.படத்தில் நயன்தாரா,ராணா டகுபதி, விவேக், ரோபோ சங்கர் போன்றோர் நடித்துள்ளனர். டிஇமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது. ட்ரைலரில் பேட்ட திரைப்படத்திற்கு பதில் அளிக்கும் படி வசனங்கள் அமைந்துள்ளது. “பேரு தூக்கு துரை, பொண்டாட்டி பேரு நிரஞ்ஜனா, பொண்ணு பேரு ஸ்வேதா, தேனி மாவட்டம் ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாடா’ , ‘கொல காண்டுல இருக்கன், ஆன உங்கள பிடிச்சிருக்கு சார்’’ என வசனம் அமைந்துள்ளது.

இத்திரைபடம் ரஜினி யின் பேட்ட படம் வெளியாகும் அதே நாளில் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வெளிவரவுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பொங்கல் திரைப்பட போட்டியில் விஜய் திரைப்படத்தோடு மோதும் அஜித் திரைப்படம் இந்தாண்டு ரஜினி படத்துடன் வெளி வரவிருக்கிறது.

மேலும் இந்தாண்டு சிம்பு நடித்து சுந்தர் சி இயக்கும் ’வந்தா ராஜவாதான் வருவேன்’ திரைப்படம் பொங்கல் போட்டியில் கலந்து கொள்கிறது. மற்றும் ஜனவரி 9 ம் தேதி சீனு ராமசாமி இயக்கும் ’கண்ணே கலைமானே’ திரைப்படம் மற்றும் ஆர்ஜே பலாஜி நடிக்கும் ’எல்கேஜி’ திரைப்படமும் வெளியாகவுள்ளது.

மற்றும் அதே மாதத்தில் விஷால் நடிக்கும் அயோக்கியா , சூர்யா நடிக்கும் என்.ஜி.கே , மற்றும் கார்த்தி நடிக்கும் தேவ், நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர்காலம்’ திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of