ரஷியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் “விஸ்வாசம்”

911

அஜித்குமார் – நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, விவேக், தம்பிராமய்யா, ரமேஷ் திலக், யோகி பாபு, கோவை சரளா ஆகியோரும்  நடித்து இருக்கிறார்கள்.

இது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வணிக சந்தையை பெற்றுள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இது என்பது குறிபிடத்தக்கது.

அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ரஷியாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது,  குறிப்பாக ரஷியாவில் மட்டும் 8-க்கும் அதிகமான நகரங்களில், ‘விஸ்வாசம்’ வெளியாகிறது.