‘தலைவன் இருக்கிறான்’ உலக நாயகனோடு இணையும் ஆஸ்கார் நாயகன்

1032

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ஒரு அரசியல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த படத்திற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பு வைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

தற்போது அந்த படத்தின் வேலைகளை கமல் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்து இயக்கும் இந்த படம் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் தயாராக உள்ளது மேலும் இந்த படத்தில் ஒரு சில பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thalaivaan-Irukiran

ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இருவருமே அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும், ஒருசில படங்கள் தயாரிக்கும்போது மட்டும் மிகச்சிறந்த உணர்வுகள் கிடைக்கும் என்றும், அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்றும், கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of